Advertisment

'இரத்தம் மற்றும் போர்' - ஆரம்பமான கமல் சிம்பு கூட்டணி

str 48 kamal simbu photos viral

Advertisment

'பத்து தல' படத்தை தொடர்ந்து தனது 48 வதுபடத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 9ஆம் தேதி அன்று வெளியானது. படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.

இப்படத்திற்காக வெளிநாடு சென்று சிறப்பு பயிற்சி சிம்பு மேற்கொண்டு வருவதாககூறப்படுகிறது. இந்த பயிற்சியை முடித்துவிட்டுஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் சென்னை வரவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சிம்பு வந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு 48 படக்குழுவுடன்கமல் எடுத்துள்ள புகைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் சிம்பு, கமல் மற்றும் தேசிங்கு பெரியசாமி இடம்பெற்றுள்ளனர். மேலும் அந்த பதிவில் இப்படம் அறிவிப்பின் போது குறிப்பிடப்பட்ட 'இரத்தம் மற்றும் போர்' என்ற வாசகமும் பதிவிடப்பட்டுள்ளது. அதோடு இப்படத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் சிம்பு மற்றும் கமல் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதனால் வைரலாகி வரும் நிலையில் வரலாற்று பின்னணியில் ஆக்ஷன் நிறைந்த மாஸ் படமாக இப்படம் உருவாவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

STR 48 desing periyasamy ACTOR KAMAL HASSHAN actor simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe