Advertisment

படமாகிறது ஜெயமோகன் கதை ; பிரபல ஓடிடி நிறுவனம் அறிவிப்பு

Advertisment

The story of Jeyamohan becomes a film ; aha ott announced

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயமோகன்.புத்தகங்களைதாண்டி பல திரைப்படங்களின் திரைக்கதை பணிகளிலும் பணியாற்றியுள்ளார். இவர் திரைக்கதை எழுதி வெளியான 'நான் கடவுள்', 'அங்காடித் தெரு', 'பாபநாசம்', '2.0' உள்ளிட்ட சில படங்கள் வெற்றிப்படமாக அமைந்துள்ளன. இப்போது 'பொன்னியின் செல்வன்', 'வெந்து தணிந்தது காடு' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். இதில் 'பொன்னியின் செல்வன்' வருகிற 30-ஆம் தேதியும் 'வெந்து தணிந்தது காடு' வருகிற 15-ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் ஜெயமோகன் எழுதிய 'வெண்கடல்'சிறுகதைதொகுப்பில் இடம்பெற்றுள்ள 'கைதிகள்' சிறுகதையைத் தழுவி ஒரு படம் உருவாகவுள்ளது. இதனை 'டர்மெரிக்மீடியா' மற்றும்ஆஹாதமிழ்ஓடிடிதளமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.ஆஹாஓடிடிதளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தைரஃபீக்இஸ்மாயில்இயக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டஅப்டேட்விரைவில் வெளியாகும்எனப்படக்குழு அறிவித்துள்ளார்கள்.

jeyamohan
இதையும் படியுங்கள்
Subscribe