Stills RS Raja

Advertisment

மங்காத்தா, கபாலி, காலா உள்ளிட்ட பல படங்களில் ஸ்டில்ஸ் போட்டோகிராபராக பணியாற்றிய ஆர்.எஸ்.ராஜாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், நடிகர் ரஜினிகாந்த் குறித்து கூறியவை பின்வருமாறு...

”ரஜினி சாரை மேக்கப்போடு எடுத்தாலும் சரி, மேக்கப் இல்லாமல் எடுத்தாலும் சரி அவர் சூப்பர் ஸ்டார்தான். அவரை போட்டோ எடுத்த பிறகு கேமரா மானிட்டரில் பார்க்கும்போது பயங்கரமாக இருக்கும். அவருடைய ஸ்டைல் அந்த மாதிரி. போட்டோகிராபியில் ரைட் லுக், லெஃப்ட் லுக் என்று சொல்வோம். அவரை எந்த லுக்கில் எடுத்தாலும் அழகாக இருக்கும். அவரை எதார்த்தமாக எடுத்த சில படங்கள்கூட பெரிய அளவில் ரீச்சாகியுள்ளன. ஏர்போர்ட்டில் நின்று அவர் பேசிக்கொண்டிருந்த புகைப்படத்தைதான் பெரிய போஸ்டராக வெளியிட்டார்கள். கண்தான் அவருடைய மிகப்பெரிய பலம். ரொம்ப நல்லா இருக்கு என்று அவர் சொன்னாலே அது பெரிய விஷயம்.

மேக்கப் கன்டினியூட்டிக்காக முந்தைய நாள் எடுத்த ஒரு போட்டோவை அவர் கேரவேனில் எப்போதும் வைத்திருப்பார்கள். காலா படத்தின்போது நான் எடுத்த போட்டோதான் வைத்திருந்தார்கள். சார் இந்த போட்டோ எப்படி இருக்கு என்று அவரிடம் கேட்டபோது ரொம்ப நல்லா இருக்கு என்று பாராட்டினார். அவரிடம் இருந்து கிடைத்த பாராட்டையெல்லாம் வாழக்கையில் மறக்க முடியாது. சின்ன சின்ன விஷயங்களையும் அவர் பார்த்து பார்த்து செய்வதால்தான் இன்றைக்கும் சூப்பர் ஸ்டாராக உள்ளார்”.