Steven Spielberg

‘ஜூராசிக் பார்க்’, ‘ஜாஸ்’, ‘இண்டியானா ஜோன்ஸ்’ உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்களை இயக்கியதன் மூலம் உலகப் புகழ் பெற்றவர் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை இரண்டு முறை வென்ற இவருக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

Advertisment

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், தற்போது ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ என்ற படத்தை ரீமேக் செய்து வருகிறார். கடந்த ஆண்டே வெளியாகி இருக்க வேண்டிய இப்படம், கரோனா அச்சுறுத்தல் காரணமாக முடங்கியது. இந்த நிலையில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் அடுத்தப் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தன்னுடைய குழந்தை பருவத்தை மையமாக வைத்து அடுத்தப் படத்திற்கான கதையை ஸ்பீல்பெர்க் எழுதி வருவதாகக் கூறப்படுகிறது. ‘ம்யூனிக்’, ‘லிங்கன்’ உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்த டோனி குஷ்னர், இந்தப் படத்திலும் இணை கதையாசிரியாக பணிபுரிய உள்ளாராம்.

Advertisment

தற்போது படத்தின் திரைக்கதையை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் நடிகர்கள்தேர்வு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தை அடுத்த வருடம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள ஸ்பீல்பெர்க், பிற பணிகளை அதற்கேற்ப திட்டமிட்டு வருகிறாராம்.