Steven Spielberg

Advertisment

பிரபல ஹாலிவுட் இயக்குனரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கிற்கு பெண் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து, அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஹாலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், தன்னை சாரா சார் என்ற பெண் கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தன்னைக் கொலை செய்ய அவர் துப்பாக்கி ஒன்று வாங்கியுள்ளதாகவும் புகார் அளித்தார். மேலும், அவர் சாராவிடம் இருந்து தனக்கும் தன் குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கிற்கும் அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சாரா சார் என்ற பெண் அவர்களை நெருங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, சாரா சார் என்ற பெண் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் அவர் குடும்பத்தினரிடம் இருந்து குறைந்தது 100 யார்ட்ஸ் (300 அடி) தூரம் கடை பிடிக்க வேண்டும்.

சாரா சார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கிற்கு அனுப்பிய ட்விட்டர் செய்தியில், "என்னுடைய ஐபி முகவரியை திருடியவர்களை தனிப்பட்ட முறையில் கொல்ல வேண்டும் என்றால் அதைச் செய்வேன், நான் கூறுவது புரிகிறதா" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.