Skip to main content

கரோனா பாதிப்பு... தொழிலாளர்களுக்கு உதவிய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

corona


தென்னிந்திய சின்னத் திரை தயாரிப்பாளர்கள் சங்கம்(STEPS) மே 1 தொழிலாளர் தினத்தன்று 2,000 பெப்சி குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளனர். 

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், மே 1 தொழிலாளர் தினமான நேற்று, கரோனா பெருந்தொற்றால் படப்பிடிப்பு வேலைகளின்றி தவித்து வரும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சுமார் 2,000 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை தென்னிந்திய திரைப்பத்ட தொழிலாளர் சம்மேளன (பெப்சி) நிர்வாகிகளிடம் ஒப்படைத்திருக்கிறது. அப்போது சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார், பொதுச் செயலாளர் குஷ்பு சுந்தர், பொருளாளர் டி ஆர் பாலேஷ்வர் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும், பெப்சி உறுப்பினர்களுக்கு உதவிடும் நோக்கில் வெகு விரைவிலேயே நிதியுதவி அளிக்கவிருப்பதாகவும், அதற்கான மும்முரமான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்