Published on 27/08/2020 | Edited on 27/08/2020

ஈ.டி , ஜுராசிக் பார்க் உள்ளிட்ட படங்களின் மூலம் உலக மக்கள் பலரிடமும் பிரபலமானவர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.
இவருடைய படங்களில் வரும் பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளால் பலரையும் ஈர்த்தவர். அதனால் இவரை பலரும் பிரம்மாண்ட இயக்குனர் என்றே சொல்கின்றனர்.
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் தந்தை 103 வயதில் வயது மூப்பின் காரணமாக காலமாகியுள்ளார். இந்த செய்தியை ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் கின் செய்தி தொடர்பாளர் பகிர்ந்துள்ளார். 73 வயதாகும் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கிற்கு மூன்று சகோதரிகளும் உள்ளனர்.