உலகப் புகழ்பெற்ற சினிமா இயக்குனரான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் தத்து மகள் பார்ன் ஸ்டாராக நடிக்க விரும்புவதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் கடந்த சனிக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

 mikaela

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

டுயல், ஈ.டி, இண்டியான ஜோன்ஸ் தொடர், ஜுராஸிக் பார்க் தொடர், ஜாஸ் என எண்ணற்ற பல உலகம் வியக்கும் படைப்புகளை கொடுத்தவர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். தற்போது அவருடைய 23 வயது மகள் மிக்கலே ஆபாச படங்களில் நடித்து, அதை தயாரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதுவே தனக்கு விருப்பமான துறை என்றும், இதற்கு தனது தந்தையும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

Advertisment

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மிக்கலேவும் அவருடைய 47 வயது காதலரும் பாருக்கு சென்று வீடு திரும்பியபோது ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதனால் கோவமடைந்த மிக்கலே கையில் இருக்கும் பொருட்களால் காதலரை தாக்கியதால் டோமஸ்டிக் வயலன்ஸ் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் அடுத்த நாள் போலீஸ் கைதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் மிக்கலே.

இது தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ள மிக்கலேவின் காதலர், “மிக்கலே கைது செய்யப்பட்டது உண்மைதான். ஆனால், தவறான புரிதலால் இந்த கைது சம்பவம் நடந்துவிட்டது. யாருக்கும் பாதிப்பில்லை” என்று கூறியுள்ளார். மேலும் என்ன காரணத்தால் மிக்கலே போலீஸால் கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறையில் வைக்கப்பட்டார் என்று சொல்ல அவர் மறுத்துவிட்டார்.