ADVERTISEMENT

விஜயகாந்த்திற்கு சிலை - முதல்வருக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை

04:05 PM Dec 30, 2023 | kavidhasan@nak…

தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக சுமார் 40 ஆண்டு காலம், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆரம்பித்து தமிழக அரசியலில் 18 ஆண்டு காலமும் சிறப்பாக செயல்பட்டவரும், தமிழக சட்டப்பேரவையில் இரண்டு முறை உறுப்பினராகவும், ஒரு முறை எதிர்க் கட்சித் தலைவராகவும், கேப்டன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டவருமான விஜயகாந்த் நேற்று முன் தினம் (28 டிசம்பர் 2023) உடல் நலமின்றி காலமானார்.

ADVERTISEMENT

அவர் மறைவுக்குத் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நேரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அச்சங்கம் சார்பில் 3 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு... மறைந்த விஜயகாந்த் வசித்து வந்த சென்னை சாலிகிராமம் அல்லது விருகம்பாக்கம் பகுதியில் பிரதான சாலைக்கு 'கேப்டன்' விஜயகாந்த் சாலை அல்லது 'புரட்சிக்கலைஞர்' விஜயகாந்த் சாலை என பெயரிட வேண்டும். தமிழக அரசால் வழங்கப்படும் திரைத்துறை விருதுகளில், இனி 'கேப்டன்' விஜயகாந்த் விருது அல்லது 'புரட்சிக்கலைஞர்' விஜயகாந்த் பெயரில் சிறப்பான விருது வழங்க ஆவண செய்ய வேண்டும் . மறைந்த விஜயகாந்த், பிறந்த மதுரை மாவட்ட தலைநகரான மதுரையில் 'கேப்டன்' விஜய்காந்த் அவர்களின் முழு உருவ சிலை ஒன்றை அரசு சார்பில் நிறுவ வேண்டும் என்பதாகும்.

ADVERTISEMENT

இந்த கோரிக்கையை, திரைத் துறையிலும் அரசியலிலும் விஜயகாந்த் செய்த காலத்தால் அழியாத சாதனைகளை பறை சாற்றும் விதமாக, தமிழக முதல்வர். ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், சென்னை மேயர் ப்ரியா ஆகியோருக்கு வேண்டு கோளாக முன் வைப்பதாக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT