நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த முத்தரசன் - இயக்குநர் நெகிழ்ச்சி

 State Secretary of the Communist Party Mutharasan praised dada director

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள 'டாடா' படம் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருந்தார். ஜென் மார்ட்டின் என்பவர் இசையமைத்திருந்தார்.

படத்தைப் பார்த்த கமல்ஹாசன், சூரி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது பாராட்டுகளைப் படக்குழுவிற்குத்தெரிவித்திருந்தனர். மேலும் ரசிகர்களும் நல்ல விமர்சனங்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், படத்தின் இயக்குநரை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அக்கட்சியை சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளதாக இயக்குநர் கணேஷ் கே பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். திரைப் பிரபலங்களைத்தாண்டி அரசியல் தலைவர்களின் பாராட்டையும் 'டாடா' படம் தற்போது பெற்று வருகிறது.

kavin
இதையும் படியுங்கள்
Subscribe