Skip to main content

ரஜினிக்கு ஆயுத பூஜை, கமலுக்கு நியூ இயர், அஜித்துக்கு...?  

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்ட, பின்பற்றப்படும் பல சென்டிமெண்டுகள் உண்டு. அதில் ஒன்று ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இருந்த விநாயகர் கோவிலில் பூஜை போட்டால் படம் வெற்றி பெறும் என்பது. முன்பு பல ரஜினி படங்கள் அவ்வாறு தொடங்கப்பட்டன. நாத்திகரான கமலின் படங்களும் கூட தயாரிப்பாளர்களின் சென்டிமெண்டுக்காக அவ்வாறு தொடங்கப்பட்டது உண்டு. இது மிகச் சிறிய விசயம்தான். இது போல பல சென்டிமெண்டுகள் சினிமாவில் உண்டு. ஒவ்வொருவருக்கும் அது மாறுபடும்.

 

rajinikanth



சென்டிமெண்டுகளைப் போலவே பெருவாரியான ரசிகர்களைக் கவர மாஸ் ஹீரோக்கள் செய்யும் சில வியூகங்கள் உண்டு. அது, அதிக மக்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளை, வணங்கும் கடவுள்களை பாடல்களில் பயன்படுத்துவது. அப்படி செய்வதன் மூலம், அந்தப் பண்டிகை கொண்டாடப்படும்பொழுதெல்லாம் அந்தப் பாடல் பயன்படுத்தப்படும், அந்த நாயகன் நினைவில் இருப்பார் என்பது உண்மை. பலருக்கும் இது வெற்றிகரமாக நிகழ்ந்திருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம், இன்றும் புத்தாண்டு வந்தால் ஊரெங்கும், தொலைக்காட்சிகளெல்லாவற்றிலும் ஒலிக்கும் 'சகலகலா வல்லவன்' படத்தின் 'ஹேப்பி நியூ இயர்' பாடல். இந்தப் படத்தை உருவாகும்பொழுது இந்தப் பாடலுக்கு இத்தனை நீண்ட வெற்றி இருக்கும் என்று எதிர்பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. வெளிவந்து முப்பத்தி ஐந்து ஆன்டுகளைக் கடந்தும் இந்தப் பாடல் இன்றும் புத்தாண்டுகளை கொண்டாட்டமாக்குகிறது. அதற்குப் பிறகு பல புத்தாண்டுப் பாடல்கள் வந்திருந்தாலும் இந்தப் பாடலை மிஞ்ச முடியவில்லை.

 

kamalhassan



கமலுக்கு நியூ இயர் என்றால் ரஜினிக்கு ஆயுத பூஜை. 'பாட்ஷா' படத்தில் ஆட்டோக்கார மாணிக்கமாக ரஜினி நடித்தது, இந்தத் தலைமுறை ஆட்டோ ஓட்டுனர்களையும் கூட தங்களை மாணிக்கமாக எண்ணி ஸ்டைலாக செயல்பட வைக்கிறது. அந்தப் படத்தின் 'நான் ஆட்டோக்காரன்' பாடல் ஆயுத பூஜை நாளன்று பாடப்படும் கொண்டாட்டப் பாடலாய் வரும். இன்றும் ஆயுத பூஜை அன்று 'நான் ஆட்டோக்காரன்' பாடல் ஒலிக்காத ஸ்டான்ட் தமிழகத்தில் இல்லை என்றே சொல்லலாம். அதன் பிறகு விஜய் உள்பட சில நடிகர்கள் ஆட்டோ ஓட்டுனர்களாக நடித்திருந்தாலும் ரஜினி பதித்த அந்தத் தடம்தான் அழுத்தமாக இருக்கிறது.

 

vedhalam ajith



தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இன்னொரு பண்டிகை விநாயகர் சதுர்த்தி. ஊரெங்கும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விநாயகருக்கு பல்வேறு உணவுப்பண்டங்களைப் படைத்து பல நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகைக்கும் தமிழ் சினிமாவில் பாடல்கள் உண்டு. அதற்கு முன்பே பண்டிகை இருந்தாலும் 80களின் பின்பாதியில்தான் தெருக்களில் சிலை வைத்து விமரிசையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் வழக்கம் தமிழகமெங்கும் பரவியது. 1993இல் வெளிவந்த 'உடன்பிறப்பு' படத்தில் உள்ள 'ஏ சாமி வருது' பாடல் விநாயகர் சதுர்த்தி பாடலாக தமிழகமெங்கும் ஒலித்தது. பிறகு அஜித் நடித்த 'வான்மதி' படத்தில் இடம்பெற்ற 'பிள்ளையார்பட்டி ஹீரோ' பாடல் அந்த பிளே லிஸ்ட்டில் சேர்ந்தது. அஜித்திற்கும் விநாயகருக்குமான பந்தம் 'அமர்க்களம்' படத்தின் 'மஹாகணபதி' பாடல், 'வேதாளம்' படத்தின் 'வீர விநாயகா' பாடல் என தொடர்கிறது. விநாயகருக்கான பக்தி பாடல்களே பல இருந்தாலும் சினிமா பாடல்களை பயன்படுத்தி கொண்டாடுவதில் இளைஞர்களுக்கு ஒரு விருப்பம் உண்டு. அந்த வகையில் தங்கள் ஃபேவரிட் பாடல்கள் இருந்தால் இன்னும் அதிகக் கொண்டாட்டம்தான். விஜய் நடித்த 'வில்லு' படத்திலும் விநாயகர் சதுர்த்தி பாடல் உண்டென்றாலும் அது வேறு விதமாக இருந்தது.

தீபாவளிக்கு விஜய் நடித்த சிவகாசியின் 'தீபாவளி தீபாவளி' பாடலும் அஜித் நடித்த 'அட்டகாசம்' படத்தின் 'தீபாவளி தல தீபாவளி' பாடலும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. இப்படி பண்டிகைக் கொண்டாட்டங்களில் சினிமா பாடல்களின் இடம் முக்கியமாக இருக்கிறது. இன்று விநாயகர் சதுர்த்தி, தெருவெங்கும் 'வீர விநாயக வெற்றி விநாயக...' ஒலிக்கிறது.                            

 

   

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

விக்ரம், லியோ பட ஸ்டைலில் ரஜினி 171 - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
lokesh kanagaraj rajinikanth movie thalaivar 171 title teaser update

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அது தற்போது தள்ளி ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், புது போஸ்டரை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டைட்டில் டீசர் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக லோகேஷ் இயக்கிய விக்ரம் மற்றும் லியோ படங்களுக்கும் டைட்டில் டீசர் வெளியானது. இது இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதே ஃபார்முலாவை ரஜினி 171 படத்திலும் லோகேஷ் தொடர்கிறார்.