Skip to main content

நாடகத்தில் நடந்த சிறிய தவறால் 16,000 கோடி நஷ்டம்... கேம் ஆஃப் த்ரோன்ஸ் குழு அதிர்ச்சி...

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

கேம் ஆஃப் த்ரோன்ஸ் கடைசி சீஸனான எட்டாவது சீஸன் வாரா வாரம் திங்கள் அன்று காலை 6:30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.  உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை கொண்ட டிவி தொடரில் கேம் ஆஃப் த்ரோன்ஸுக்கே முதலிடம். கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதன் முதலில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஹெச்.பி.ஓ சேனலில் ஒளிப்பரப்பாக தொடங்கியது. இதனை அடுத்து உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை கவர்ந்து, தற்போது டிவி சேனலில், டோரண்டில் அதிகம் டவுன்லோட் செய்து பார்க்கும் நிகழ்ச்சி என அனைத்திலும் முதலிடம் பிடித்திருக்கிறது கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
 

got

 

 

அமெரிக்க எழுத்தாளரான ஜார்ஜ் ஆர்.ஆர் மார்டினின்  ‘அ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபையர்’ நாவலை அடிப்படையாக கொண்டது இந்த தொடர். சுமார் 7 தொடர்களை கொண்ட இந்த நாவலில் தற்போதுவரை ஐந்து தொடர்தான் பப்ளிஷாகி உள்ளது. இந்த ஐந்து தொடர்களை அடிப்படையாக கொண்டே நிகழ்ச்சி எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கடைசி சீஸனான எட்டாவது சீஸனுக்கு வந்தடைந்துள்ளது. இந்த வாரம் திங்கள் கிழமை அன்று நான்காவது பகுதி வெளியானது. முந்தைய பகுதியில்தான் இரு முக்கிய குழுக்களுக்கும் போர் நடந்து முடிவடைந்ததை போன்ற அமைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் அந்த போரில் மடிந்தவர்களுக்கு கடைசி மரியாதை செலுத்திவிட்டு, போரை வென்றதை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் காட்சி இருந்தது. அப்போது ஒரு ஃபிரேமில்  ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கப் போல ஒரு பொருள் தெரிந்தது.
 

இது உடனடியாக காட்டுத் தீ போல ட்விட்டரில் பரவியது. பலரும் காபி கப் இருக்கும் படத்தை பதிவிட்டு ட்ரெண்டாக்கி வந்தனர். இதற்கு தயாரிப்பு நிறுவனத்தில் தொடங்கி, நாடகத்தின் ஆர்ட் டைரக்டர் வரை விளக்கமளித்தார்கள். அனைவரும் தவறுதலாக அந்த கப் ஃபிரேமில் தெரிந்துவிட்டது என ஒப்புக்கொண்டார்கள். திங்கள்கிழமை அடுத்து ஒளிப்பரப்பாகும் வீடியோக்களில் அந்த காபி கப் தெரியாததுபோல் எடிட் செய்து மாற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது. 
 

 

 

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் இந்த சின்ன தவறால் ஏற்பட்ட விளைவை கண்டுபிடித்துள்ளது.ஹெச்.பி.ஓ சேனல் தன்னுடைய நிகழ்ச்சியில் வெறு ஒரு பிராண்ட்டை பணத்திற்காக விளம்பரப்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக அவர்களை தயாரிப்பு செலவுகளில் உபயோகப்படுத்திக் கொள்வார்களாம். 
 

தற்போது இந்த காபி கப் தெரிந்ததால் சுமார் 2.3 பில்லியன் டாலர் (இந்தியமதிப்பில் 16,000 கோடி) செலவின்றி ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு விளம்பரமாகியுள்ளதாம். இன்னுமொரு கொடுமையான விஷயம் என்ன என்றால் அந்த காபி கப் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துனுடையதே இல்லையாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி!

Published on 24/07/2020 | Edited on 24/07/2020

 

house of targeryan

 

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான வெப் சீரிஸில் ஒன்று 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'. தொடக்கத்திலிருந்து 8 சீசன்கள் முடியும்வரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற வெப் தொடர். கடந்த ஆண்டு முடிவடைந்த இந்தத் தொடரை எச்.பி.ஓ. நிறுவனம் தயாரித்திருந்தது. 

 

ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் எழுதிய ‘எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்’ நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரிஸ் ஏராளாமன விருதுகளையும், சாதனைகளையும் படைத்திருக்கிறது.

 

இந்நிலையில் இத்தொடருக்கு முந்தைய கதையை வெப் சீரிஸாக எடுக்கவுள்ளதாக எச்.பி.ஓ. நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தக் கதை ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நிகழ்வுகள் நடக்கும் காலத்துக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை களத்தைக் கொண்டது.

 

இதை 10 எபிசோட்களாக எடுக்க எச்.பி.ஓ. நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்தொடரை 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் சில எபிசோட்களை இயக்கிய ரயான் கோன்டால், மிக்யுல் ஸ்போச்னிக், உள்ளிட்டோர் இயக்கவுள்ளனர். இத்தொடருக்கு ‘ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

இத்தொடருக்கான நடிகர், நடிகையர் தேர்வை எச்.பி.ஓ. நிறுவனம் தொடங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டு இத்தொடர் இணையத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

 

Next Story

வெளியானது GOT... ஒரு வருட காத்திருப்புக்குப் பின் மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. ஆங்கிலத் தொடரான இது இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ளது. இன்று 8வது சீசனின் முதல் எபிசோட் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 
 

got

 

 

ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்ற அமெரிக்க எழுத்தாளர் 1991ஆம் ஆண்டு  ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ என்ற நாவலை எழுதினார். இதனை அடுத்து நான்கு பாகங்களை எழுதியுள்ளார். இதை வைத்துதான் தொடராக எடுக்கப்படுகிறது. இத்தொடரின் முதல் எபிசோட் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியானது. இதுவரை ஏழு சீசன்களாக வெளியாகியுள்ள இந்த தொடரின், ஒவ்வொரு சீசனிலும் 10 பகுதிகள் உள்ளன.
 

இதில் ஸ்பெஷல் என்ன என்றால் விருவிருப்பாக எழுதப்பட்ட திரைக்கதைதான். இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது. வெஸ்ட்ரோஸ் எனப்படும் நிலப்பரப்பில் இருக்கும் 7 ராஜ்ஜியங்கள் இடையே நடக்கின்ற போர். யார் இதில் வெற்றிபெற்று அந்த சிம்மாசனத்தில் அமருவார்கள் என்பதுதான்  ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மையக்கரு.
 

இந்த தொடரின் கடைசி சீசனான 8வது சீசன் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதற்காக கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் காத்திருந்தார்கள். இந்நிலையில் இன்று 8வது சீசனின் முதல் எபிசோட் வெளியாகியுள்ளது. கடைசி சீசன் என்பதால் ஆறு பகுதிகள் மட்டும்தான் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததை போன்றே அதிகாலை 6:30 மணிக்கு முதல் எபிசோட் இணையத்தில் வெளியானது.