நவராத்திரி கொலுவை ரசிகர்களின் வீட்டுக்குச் சென்று பார்வையிட்ட விஜய் டிவி ஸ்டார்ஸ்

star vijay navaratri celebration

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி, நவராத்திரி விழாவைப் புதுமையான முறையில் தமிழக மக்களுடன் இணைந்துகொண்டாடியுள்ளது. தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன்விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து,நவராத்திரிவிழாவைக் கொண்டாடியுள்ளனர். 2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000க்கு மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக இந்த விழா நடந்தேறியுள்ளது.

பொதுமக்கள் கலந்துகொள்ள திரு விளக்குப் பூஜை,சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப் பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் எனப் பல்வேறு நிகழ்வுகள் நடத்தியுள்ளது விஜய் டிவி. மொத்தமாக ஏழு நகரங்களில் நடந்த இந்த விழாவினில் 2500க்கும் மேற்பட்ட பெண்கள் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன்திரு விளக்கு பூஜை உட்படநிகழ்வுகளில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஊர்களிலும்மக்கள் அதிகம் கூடி, நவராத்திரி விழாவினை விஜய் டிவி உடன் இணைந்து கொண்டாடினர். ஏறத்தாழ 10000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடி இவ்விழாவினை ரசித்துள்ளனர்.

நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்துகலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடினர் இவர்களுடன் ஸ்டார் விஜய் முன்னணி பிரபலங்கள் பலரும் இவ்விழாவினில் பங்கேற்றனர். விஜய் தொலைக்காட்சி நவராத்திரி ஸ்பெஷலாக நடந்து முடிந்தநவராத்திரி கொண்டாட்டங்கள்மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

super singer vijay tv
இதையும் படியுங்கள்
Subscribe