/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfgdfg_14.jpg)
அசல் ஹெச்டி அனுபவம் என்பது காண்பிப்பதில் மட்டுமில்லை.. பார்ப்பதிலும் இருக்கிறது என்பதை முன்னிறுத்தி,தனது புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கியுள்ளது ஸ்டார் குழுமம்.
இந்தியாவில் தொலைக்காட்சி பார்வையாளர்கள்HD TV வைத்திருந்தாலும், HD Set-Top Box இணைப்பு பெற்றிருந்தாலும் பெரும்பாலும் HD இல்லாத சாதாரண சேனல்களையே கண்டுகளித்து வருகின்றனர். HD TV இருந்தாலே போதும், ஹெச்டி-ல் பார்க்கும் ஒரு முழுமையான அனுபவம் கிடைக்கும் என்ற பொய்யான கருத்து பெரும்பாலான தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே இருக்கிறது. முழுமையான ஹெச்டி பார்க்கும் அனுபவத்தைப் பெற, ஹெச்டி சேனல்களை சந்தா செலுத்தி பெற வேண்டுமென்பதை இந்தியாவில் வெறும்25% வாடிக்கையாளர்கள் மட்டுமே அறிந்திருக்கிறார்கள் என்ற செய்தி, அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை ஸ்டார் இந்தியா குழுமம் துவங்கியுள்ளது.
‘காண்பிப்பதில் மட்டுமில்லை.. பார்ப்பதிலும் அசல் ஹெச்டி அனுபவம் இருக்கிறது’ என்று பொருள்படும் ‘SIRF DIKHAANE KE LIYE NAHI, DEKHNE MEIN BHI REAL ‘HD’ EXPERIENCE’ என்ற இந்த பிரச்சாரம் மூலம் ஸ்டார் ஹெச்டி சேனல்களின் ப்ரத்யேக அம்சங்களான, விசாலமான படம் [wider picture], 5 மடங்கு துல்லியமான திரைப்படம் [5x sharper picture] மற்றும் 5.1 டால்பி சரவுண்ட் சவுண்ட் [5.1 Dolby surround sound] போன்ற அம்சங்கள் குறித்தும், ஹெச்டி சேனல்களைப் பார்க்கும் அனுபவம் குறித்தும் மக்களிடையே ஸ்டார் குழுமம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
ஸ்டார் & டிஸ்னி இந்தியா நிறுவனத்தின் இந்தியா மற்றும் சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சி விநியோகத் தலைவர் குர்ஜீவ் சிங் கபூர் இதுகுறித்து கூறுகையில், "ஸ்டார் இந்தியாவில்எங்கள் பார்வையாளர்களுக்கு ஈடுஇணையற்ற பொழுதுபோக்கு அனுபவத்தையும் மதிப்பையும் வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து அக்கறையுடன்கவனம் செலுத்தி வருகிறோம். பல்வேறு வகைகளிலான நிகழ்ச்சிகள் மற்றும் மொழிகளில், 26 ஸ்டார் ஹெச்டி சேனல்களின் மூலம் எங்களது நிகழ்ச்சிகள் மற்றும் படைப்புகளின் மீது வாடிக்கையாளர்களின் கவனத்தை இன்னும் அதிகம் ஈர்க்க முடியும்.இந்த ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு இருக்கின்றன.
அதனால் எங்களது வாடிக்கையாளர்கள் ஸ்டேடியத்தில் இருப்பது போன்ற அசல் உணர்வை, அனுபவத்தைப் பெற ஹெச்டி சேனல்களின் அந்த உண்மையான அனுபவத்தைக் கொண்டாட விரும்புகிறோம். ஸ்டார் ஹெச்டி சேனல்களுக்கான சந்தாவை செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைக்காட்சி பார்க்கும் அனுபவத்தை மிகச்சிறப்பானதாக மேம்படுத்த இதுவே மிகச் சரியான நேரம். எனவே, இந்தப் பிரச்சாரம், ஹெச்டி சேனலின் உண்மையான அனுபவம் குறித்த விழிப்புணர்வு இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்டார் ஹெச்டி சேனல்களை ரீசார்ஜ் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் உணர வைக்க உதவுகிறது.’’ என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)