ss rajamouli

இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. பெரிய திரை பிரபலங்களும், மாநில மற்றும் மத்திய அமைச்சர்களும் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

அண்மையில்தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆரத்யா உள்ளிட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யா இருவரும் வீடு திரும்பிவிட்டனர்.

Advertisment

இந்நிலையில் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் தெரிவித்துள்ள ராஜமௌலி, “சில தினங்களுக்கு முன்பு எனக்கும், என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அது தானாகவே சரியாகிவிட்டாலும், நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம். இன்று பரிசோதனை முடிவில் மிதமான கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி, நாங்கள் எங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நன்றாக உள்ளோம். ஆனால், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்ய காத்திருக்கிறோம்” என்றார்.

Advertisment

அவருடைய பதிவை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவர் பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.