ADVERTISEMENT

"நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்றாக ரசித்து பார்த்தேன்" - எஸ். எஸ்.ராஜமௌலி பரிந்துரை

04:07 PM May 29, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தெலுங்கில் அனுராக் ரெட்டி, சரத் சந்திரா, சந்துரு மனோகரன் ஆகியோர் தயாரிப்பில் கடந்த 26ஆம் தேதி வெளியான படம் 'மேம் ஃபேமஸ்' (Mem Famous). இப்படத்தை சுமந்த் பிரபாஸ் என்பவர் இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மணி ஏகுர்லா, மௌரியா சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கல்யாண் நாயக் இசையமைத்திருந்தார். ஒரு கிராமத்தில் வாழும் சில இளைஞர்களின் வாழ்க்கையை காமெடி, காதல் என கலந்த ஒரு படமாக உருவாகியிருக்கிறது. மேலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை இயக்குநர் எஸ்,எஸ்.ராஜமௌலி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் ஒரு படத்தை நன்றாக ரசித்து பார்த்தேன். நடிகராகவும் இயக்குநராகவும் பணியாற்றிய சுமந்துக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் நடித்த நடிகர்கள் இயல்பாக நடித்துள்ளனர். குறிப்பாக அஞ்சி மாமா. அனைவருக்கும் பார்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இப்படத்தை பார்த்த மகேஷ்பாபு, "புத்திசாலித்தனமான படம். படத்தில் ஒவ்வொரு நடிகரின் குறிப்பாக எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகர்களின் நடிப்பால் அசத்தியுள்ளார். சுமந்த் பிரபாஸ் திறமையான மனிதர். காட்சிகள், பின்னணி இசை என அனைத்தும் கச்சிதமாக இருந்தது. படத்தின் தயாரிப்பாளர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்." என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT