பாகுபலி-2 படத்திற்கு பின் எஸ்.எஸ். ராஜமௌலி, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகிய இருவரையும் வைத்து இயக்குகிறார். இந்த படத்திற்கு படக்குழு பெயர் வைக்காமல் ஆர்.ஆர்.ஆர் என்று அழைக்கப்படுகிறது.

Advertisment

rrr

இந்நிலையில், இன்று இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு ஹைதரபாத்தில் நடைபெறுகிறது. அப்போது இந்த படத்தில் யார் யார் நடிக்கின்றனர் என்று புதிய தகவலை அறிவித்துள்ளனர். படத்தின் நாயகிகளாக இங்கிலாந்தை சேர்ந்த எட்கர் ஜோன்ஸ் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த அலியா பட் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ் நடிகரான சமூத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனான அஜய் தேவ்கனும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாகுபலியை விட பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த படம், அடுத்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், படக்குழு இந்த படத்தின் கருக் கதையையும் வெளியிட்டுள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு 1920ஆண்டுகளில் படத்தின் கதை களம் இருப்பதாகவும். அல்லூரி சீதாராமராஜூ மற்றும் கொமாரம் பீம் என்கிற இரண்டு சுதந்திர வீரர்களின் உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.