பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 உள்ளிட்ட படங்களால் இந்திய சினிமாவை வேறு தளத்திற்கு கொண்டு சென்றவர் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவ்வளவு பெரிய வெற்றிக்கு பின்னர் எந்த மாதிரியான படத்தை ராஜமௌலி எடுக்கப்போகிறார் என்று காத்திருந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் ராஜமௌலி. இந்த முறை 400 கோடி பொருட் செலவில் இரு சுதந்திர வீரர்களை பற்றின கதைக்களத்தை கொண்டு எடுக்கப்போவதாக அறிவித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ss.rajamouli.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வேறு யாரெல்லாம் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று அறிவிக்காமலே இருந்த படக்குழு கடந்த மாதம் முழு விபரத்தையும் அறிவித்தது. சமுத்திரகனி, அலியா பட், அஜய் தேவ்கன், எட்கர் ஜோன்ஸ் என்று இந்த படத்தில் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
பல கோடி செலவுகளில் எடுக்கப்படும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில் படத்தின் முக்கிய நடிகர் ராம் சரண் உடற் பயிற்சி செய்யும்போது கையில் அடிபட்டது. இதனால் அவருக்கு குணமாகும் வரை படப்பிடிப்பு நடக்காது என்று படக்குழு ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தது.இதனால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. புனேவில் படப்பிடிப்புக்காக நடிகர்களிடம் வாங்கப்பட்ட தேதிகள் அனைத்துமே வீணானது. இந்தப் பின்னடைவைச் சமாளிக்க ஜூனியர் என்.டி.ஆர். சம்பந்தப்பட்டக் காட்சிகளைப் படமாக்கத் தொடங்கினர்.
இதனையடுத்து ஜூனியர் என்.டி.ஆர்-க்கும் கை மணிக்கட்டில் அடிபட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. தன்னுடைய இரண்டு நாயகர்களுக்கு காயம் ஏற்பட்டதால் இயக்குனர் ராஜமௌலி வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இரண்டு நாயகர்களுக்குமே அடிபட்டுள்ளதால், மே மாதத்தில் அடுத்த ஷெட்யூலுக்காகத் தயாராகி வருகின்றனர். அதற்குள் இரண்டு நாயகர்களுக்கும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)