பாகுபலி 2-ன் இமாலய வெற்றிக்குப் பின்னர் இயக்குனர் ராஜமௌலி 'ஆர் ஆர் ஆர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுவும் ஒரு பிரம்மாண்ட பட்ஜெட்டில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் உள்ளிட்டோரை வைத்து உருவாகும் பிரம்மாண்ட படமாக உள்ளது. கரோனா தொற்று காரணமாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இயக்குனர் ராஜமௌலி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகச் செயல்பட்டு வருகிறார்.

Advertisment

rajamouli

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றிற்கு வீடியோ காலின் மூலம் பேட்டியளித்தார் ராஜமௌலி. அப்போது, இந்த வருடம் நான்கு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஆசிய படமான பாரசைட் படம் குறித்த பேச்சு வந்துள்ளது.

அதற்கு பதிலளித்துள்ள ராஜமௌலி, அந்தப் படம் எனக்குப் போரடித்தது. சுவாரஸ்யமாக இல்லாததால் தூங்கிவிட்டேன். கண் விழித்துப் பார்த்தால் ஒருவருக்கு ஒருவர் குத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Advertisment

ராஜமௌலியின் இந்தக் கருத்தினால் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.