ss rajamouli  buys the first ticket of Salaar

கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, பிரித்திவிராஜ் வில்லனாக நடிக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதைப் பார்க்கையில் பிரசாந்த் நீலின் வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகளும், பவர்ஃபுல்லான வசனங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து கதை அமைத்துள்ளனர்.

இதையடுத்து இப்படத்தில் யஷ் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக இளம் பாடகி தீர்த்தா ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். ஆனால் தவறுதலாக சொல்லிவிட்டதாக பின்பு சமூக வலைத்தளம் வாயிலாகத் தெரிவித்தனர். இதனிடையே தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் டப்பிங் பேசியுள்ளதாக பிரித்விராஜ் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். பின்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இருவரின் கதாபாத்திரத்திற்கும் இருக்கும் நட்பை விவரிக்கும் விதமாக இப்படம் அமைந்திருந்தது.

Advertisment

இந்த நிலையில், ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் படக்குழு கலந்து கொண்ட நிலையில், பிரபல இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலியும் கலந்து கொண்டார். அப்போது சலார் படத்தின்முதல் டிக்கெட்டை வாங்கினார். அவரிடம் அந்த டிகெட்டை படக்குழு வழங்கியது.