உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,30,856 என்ற அளவிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,60,754 என்ற அளவிலும் இருக்கிறது. கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக அளவில் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றன.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,116லிருந்து 17,265 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 519லிருந்து 543 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்துதமிழகத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அர்ஜூன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி, #BetheREALMAN என்று புது ட்விட்டர் சவாலை அறிமுகம் செய்துள்ளார். அதில், “ஒரு ஆணால் சிறப்பாக வீட்டு வேலைகளைச் செய்ய முடியும். ஒரு உண்மையான ஆண் இதுபோன்ற தருணங்களில்ம் தன்னுடைய மனைவியை எப்போதும் தனியாக வேலை செய்யவிட மாட்டார். தயவுசெய்து வீட்டு வேலைகளுக்கு உதவுங்கள். #BetheREALMAN. இதை ஊக்கப்படுத்தி ராஜமெளலி சாரை ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த சவாலை ஏற்று, இயக்குனர் ராஜமௌலி ட்விட்டரில் தன்னுடைய மனைவியுடன் வீட்டு வேலை செய்வது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் அவர், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், இயக்குனர் சுகுமார் உள்ளிட்ட பிரபலங்களுக்கு இந்த சவாலை விடுத்துள்ளார்.