irumbu thirai.jpeg

shrutihaasan

கடந்த சிலகாலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று தகவல்கள் பரவி வந்த நிலையில் தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார் ஸ்ருதி. அதில்..."நடிக்கும் படங்களில் ஏதோ படத்தில் நானும் இருந்தேன் என்பது மாதிரி கதைகள் இனிமேல் எனக்கு தேவை இல்லை. நல்ல கதை, திருப்தியான கதாபாத்திரமாக இருந்தால்தான் நடிப்பேன். அதற்காகத்தான் படங்களை குறைத்துள்ளேன். பெயர் சொல்வது மாதிரி படத்தில் முழு சக்தியையும் காட்டி நடிக்க வேண்டும். வந்தோம் போனோம் என்றெல்லாம் இருக்க கூடாது என்பதில் தெளிவாகி விட்டேன். எனது கதாபாத்திரத்தில் நடிக்கும்போது எளிதில் திருப்தி அடைய மாட்டேன். மனதுக்கு பிடிக்கிற மாதிரி நடிப்பு வருவது வரை திரும்ப திரும்ப நடிப்பேன். இப்போது நல்ல கதைகள் அமையாததால் நடிக்கவில்லை. இனிமேல் நல்ல பாடகியாக வளர முயற்சி செய்கிறேன். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது முடிவு. தற்போது திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை" என்றார்.