/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/98_45.jpg)
பிரபல திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த யூ.பி.எஸ்.சி(UPSC) தேர்வில், அகில இந்திய அளவில் 75வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றார். இந்த தேர்வு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நடத்தப்பட்ட நிலையில் இதில் தேர்ச்சி பெற்ற தேர்வாளர்களுக்கு முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்பு வெளிமாநிலங்களில் களப்பணி பயிற்சி பெற்று வந்தனர்.
அவர்களில், மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராக இருந்தார். பின்பு திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தற்போது விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இதற்காக திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சின்னி ஜெயந்த் மற்றும் அவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)