மணிபாரதி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தி பெட்’ (The Bed). இப்படத்தை ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, தாஜ்நூர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், படத்தின் டீசர் வெளியீடு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நடிகை சிருஷ்டி டாங்கே பேசுகையில், “இந்தப் படத்தில் கடும் குளிரில் நடுங்கிக்கொண்டே நடிக்க வேண்டி இருந்தது. சில நேரங்களில் குளிர் ஜுரம்கூட வந்துவிட்டது. அந்த சமயத்தில் ஸ்ரீகாந்த் எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து காட்சிகளில் எளிதாக நடிக்க உதவினார். அதேபோல படப்பிடிப்பில் நடிகர் ஜான் விஜய் எப்போதும் எல்லாரையும் கலாய்த்துக் கொண்டேயிருப்பார். நானும் பதிலுக்கு திருப்பி கலாய்ப்பேன் என்பதால் இந்தப் பெண்ணிடம் மட்டும் எந்த வம்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று பயந்துகொண்டு என் பக்கமே வர மாட்டார்” எனக் கூறினார்.