Advertisment

ஸ்ரேயா சீக்ரட் திருமணத்திற்கான காரணம் இதுதான்....

Advertisment

நடிகை ஸ்ரேயா ரஷ்யாவைச் சேர்ந்த ஆன்டிரே கோச்சேவ் என்ற இளைஞரை காதலித்து வந்தார். மிகப்பெரும் கோடீஸ்வரரான இவர் சிறந்த டென்னீஸ் விளையாட்டு வீரர் ஆவார். உதய்ப்பூரில் இருவரும் சந்தித்துக் கொண்ட போது நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. பின்னர் தன் காதலரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த அவர் மார்ச் மாதம் திருமணம் செய்வேன் என்றும் அறிவித்திருந்தார். ஆனால் திடீரென்று ஸ்ரேயா - ஆன்டிரே கோச்சேவ் திருமணம் மும்பையில் கடந்த 12ந்தேதி ரகசியமாக நடந்தது. இந்த திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி நடந்தது. இந்நிலையில் இந்த திருமணத்தை கோலாகலமாக நடத்தாமல் ரகசியமாக ஏன் நடத்தினார்கள் என்ற காரணம் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி ஸ்ரேயாவின் அம்மாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையாம். இதனால் பிரச்சனை ஏற்பட்டு திருமணம் தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான், முன்னதாகவே ஸ்ரேயா-ஆண்ட்ரே ரகசிய திருமணம் நடந்துள்ளது என்று இந்தி பட உலகில் பரவலாக பேசப்படுகிறது.

shriyasaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe