Advertisment

சமந்தாவை ஃபாலோ பண்ணும் ஸ்ரேயா!

irumbu thirai.jpeg

Advertisment

sriya saran

சிம்புவின் 'அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்' படத்திற்கு பிறகு நடிகை ஸ்ரேயா அடுத்ததாக அரவிந்த் சாமியுடன் ‘நரகாசுரன்’ என்ற படத்தில் நடித்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்ற நிலையில் திடீரென்று தன் காதலர் ஆண்ட்ரே கோஸ்சீவ்வை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இதனால் அவர் இனிமேல் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஸ்ரேயா மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கியிருக்கிறார்.

பாலகிருஷ்ணாவுக்கு மூன்றாவது முறை ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு முன் பாலகிருஷ்ணாவுடன் கவுதமபுத்ர சாதகர்ணி, பைசா வசூல் என இரண்டு படங்களில் நடித்திருந்தார் ஸ்ரேயா. இந்நிலையில் ஏற்கனவே திருமணத்திற்கு பிறகும் நடிகையர்கள் நடிக்க வேண்டும் என்ற முன்னுதாரணத்தோடு நடித்து வரும் சமந்தா போல் தற்போது ஸ்ரேயாவும் களத்தில் குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

shriyasaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe