தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டிய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சில தினங்களுக்கு முன் தெலுங்கு நடிகர் சங்கம் தனக்கு உறுப்பினர் அட்டை வழங்க மறுத்ததை கண்டித்து ஐதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தக சபை அலுவலகம் எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இது பட உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் போலீசார் அவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதையடுத்து நடிகை ஸ்ரீரெட்டி மீண்டும் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை பிரபல தயரிப்பாளரின் மகன் மீது கூறினார். பிரபல தயரிப்பாளரின் மகன் அடிக்கடி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அரசுக்கு சொந்தமான அந்த ஸ்டூடியோவுக்குள் யாரும் வரமாட்டார்கள் என்பதால் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஸ்டூடியோவை சிவப்பு விளக்கு பகுதியாகவே மாற்றிவிட்டனர் என்றும் கூறி திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் மகன் தொடர்பான புகைப்படங்களை விரைவில் 'ஸ்ரீலீக்ஸில்' வெளியிடுவேன் என்றும் கூறிபரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரான டகுபதி சுரேஷ் பாபுவின் மகனும், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராணா டகுபதியின் தம்பியுமான அபிராம் டகுபதியுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தெலுங்கு திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்கள் தெலுங்கு பட உலகில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொன்னபடியே படங்களை வெளியிட்டார் 'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டி
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/1523382461-1068.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/daecpvdvwaaf5ec.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/whatsapp-image-2018-04-11-at-09.13.35.jpeg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/whatsapp-image-2018-04-11-at-09.13.34.jpeg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/whatsapp-image-2018-04-11-at-09.13.38.jpeg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/whatsapp-image-2018-04-11-at-09.13.36.jpeg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/maxresdefault.jpg)