தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்கள் மீதும் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல்ரீதியாக பயன்படுத்திக்கொண்டனர் என்று புகார் தெரிவித்திருந்தார் ஸ்ரீரெட்டி. தற்போது இவர் மூன்று தமிழ் படங்களில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகின. அதனால் சென்னையில் வசித்து வருகிறார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தற்போது இவர் சில்க் சுமிதாவை பல முன்னணி ஹீரோக்கள் பயன்படுத்திக்கொண்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
“சில்க் சுமிதாவை முன்னணி கதாநாயகர்கள் உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர். அந்த சைக்கோக் களை எப்படி பட உலகின் சகாப்தம் என்று அழைக்க முடியும். சினிமா மற்றும் அரசியல் காரணமாக அவரை இழந்து விட்டோம். உங்களை மறக்கமாட்டோம் சில்க் சுமிதா” என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். எந்த நடிகர் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.