சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனராக இருந்த 55 வயது மருத்துவர் சைமன், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இவர்ஏற்கனவே சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிஸ் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இறந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

tete

Advertisment

அதன்பிறகு மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. இந்தத் தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அவரது உடல் வேலங்காடு மயானத்திற்கு எடுத்துசெல்லப்பட்டு காவல்துறையினரின் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேர் மீது, காவல் துறையினரைபணி செய்யவிடாமல் தடுத்தல், ஊரடங்கை மீறுதல், தொற்று நோய்தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களைகைது செய்தனர்.

nakkheeran app

Advertisment

கரோனா நோய் தொற்று எதிர்ப்புபோரில், முன் படைவரிசை வீரர்கள் எனப் போற்றப்படும் மருத்துவர்கள் மரணத்துக்கு மரியாதைதராமல் இதுபோன்ற செயலில் ஈடுபடும் சிலரால் மனிதாபிமானம் சிதைக்கப்படுவதாகத் தலைவர்கள் பலரும், மருத்துவர்கள், திரையுலகினர், மருத்துவச் சங்கத்தினரும் வேதனை தெரிவித்து வரும் நிலையில் சைமனின் இறுதிச் சடங்கு குறித்து நடிகை ஸ்ரீப்ரியா சமூகவலைத்தளத்தில் வேதனை தெரிவித்துள்ளார். அதில்...

"கரோனா மனித இனத்தையே மரண பயத்தில் ஒதுக்கி வைத்திருக்கும் தொற்று. இதுபோன்ற இயற்கைசீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் மனிதன் மாறுவான், மனிதத்தன்மை மேலோங்கும் என்று நினைப்போமேயானால்,அது தவறோ என்று எண்ணும்படி எத்தனை சம்பவங்கள்? கள்ளச்சாராயம், ஊழல், மதத்தின் அடிப்படையில் மக்களை மதிப்பது. அத்தனையும் அமோகமாக நடந்து கொண்டிருப்பதாகசெய்திகள். இவற்றை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் இந்த காணொலி, என் மனதை உலுக்கிவிட்டது. கை தட்டினால் மட்டும் போதுமா? நமக்காக சேவை செய்து மாண்ட ஒரு மருத்துவருக்கு நாம் செலுத்தும் நன்றியா இது?"