Advertisment

"எப்பதான் சரியான ஆளுக்குத் தருவீங்க..." - சூப்பர் சிங்கர் வின்னர் குறித்து ஸ்ரீப்ரியா காட்டமான விமர்சனம்

சூப்பர் சிங்கர் சீசன் நிகழ்ச்சியின் 7 நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் மூக்குத்தி முருகன், சாம் நிஷாந்த், புன்யா, விக்ரம், கௌதம் ஆகியோர் இறுதி சுற்றுக்கு சென்றனர். இறுதிச் சுற்றில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பாடல்களைப் பாடினர். இறுதியில் மூக்குத்தி முருகன் டைட்டிலை வென்று முதல் பரிசு, ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசாகப் பெற்றார். அவருக்கு அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டாவது இடம் விக்ரமுக்கு கிடைத்தது. அவருக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக வழங்கப்பட்டன. 3-வது இடத்தை சாம் நிஷாந்த், புன்யா ஆகிய இருவரும் பெற்றனர்.

Advertisment

sri priya

இந்நிலையில் இந்த டைட்டில் வின்னர் குறித்து இந்த நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்தார் நடிகை ஸ்ரீபிரியா. அதில், “விஜய் டிவியில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இசையில் கைதேர்ந்தவர்களுக்கு டைட்டில் வின்னர் தருவதில்லை என்று நான் நம்புகிறேன். இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரில் புன்யா மற்றும் விக்ரம் ஆகியோர்தான் பிரில்லியண்டானவர்கள். கடந்த முறை சத்யபிரகாஷுக்கு வின்னர் டைட்டில் தராததில் இருந்தே இவர்களின் போங்கு தொடங்கிவிட்டது. எப்பவாவது நியாயமா சங்கீதத்தை மட்டும் கௌரவிக்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்கிறேன்” என்று ஒரு பதிவை ட்வீட் செய்திருந்தார்.

Advertisment

இதனையடுத்து மேலும் ஒரு ட்வீட்டில் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்தும் விமர்சித்து பதிவிட்டுள்ளார். “விஜய் டிவி சூப்பர் சிங்கர் குறித்து பதிவிட்டபோது என்னுடைய நியாபக மறதியால் இதை விட்டுவிட்டேன். கடைசியாக வெளிவந்த ஜூனியர் சீசனிலும் ஹிருத்திக் என்ற குழந்தை மேதைதான் தகுதியான வெற்றியாளர்” என்று கடுமையான விமர்சித்துள்ளார்.

IIT

super singer sripriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe