
தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ஸ்ரீமன் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்,"பதவியேற்பு விழா. அற்புதமான சேவையைச் செய்ய கடவுள் உங்களுக்குப் பலம் அளிக்கட்டும். பொது மக்கள், அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல்வாதிகள் மற்றும் நமது மாநிலத்தின் மூத்த தலைவர்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள். வெற்றி உங்களைப் பின்தொடரட்டும். அன்புடன் உங்கள் விசிறி" எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)