srikanth under police investigation

சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் பிரசாந்த் என்பவர் மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடந்த விசாரணையில் பிரதீப் என்பவர் உள்ளிட்ட சிலரிடம் இவர் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. பிரதீப், போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.

Advertisment

இதனிடையே அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாந்த், தமிழ் திரைப்பட நடிகர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வருவதாக சொல்லப்படும் நிலையில் இவரிடம் ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்தின் செல்போனை ஆய்வு செய்ததில் அதில் ஸ்ரீகாந்த் தொடர்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஸ்ரீ காந்திடம் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் மருத்துவ பரிசோதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

2002ஆம் ஆண்டு வெளியான ரோஜாக் கூட்டம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்பு ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, பம்பரக்கண்ணாலே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து பிரபலமானார். பின்பு ஹீரோவாக நடிப்பதை குறைத்துவிட்டு துணை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் விஜய்யுடன் நடித்த நண்பன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக இவர் நடிப்பில் ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ என்ற படம் கடந்த மார்ச் மாதம் வெளியகியிருந்தது. இதில் அவர் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த சூழலில் போதைப்பொருள் விவகாரத்தில் இவரிடம் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியானது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment