போதைப்பொருள் வழக்கு; ஸ்ரீகாந்த், கிருஷ்ணா சிறையில் இருந்து விடுவிப்பு

434

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இது திரை வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதான இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதையடுத்து ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நேற்று முன் தினமான 8ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் இருவருக்கும் வழங்கப்பட்டது.

என்ன நிபந்தனை என பார்க்கையில், இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் புழல் விசாரணை அதிகாரி முன்பு தினமும் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இருவருக்கும் ஜாமீன் 8ஆம் தேதியே அறிவிக்கப்பட்டாலும் ஜாமினுக்கான ஆணை நேற்றைய தினமான 9ஆம் தேதி மாலை தான் சிறைக்கு சென்றது. இதையடுத்து இருவரும் ஜாமீன் பெற்ற அடிப்படையில் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Actor krishna Conditional bail jail srikanth
இதையும் படியுங்கள்
Subscribe