Srikanth Bolla biopic jyothika acting in hindi film after 21 years

ஜோதிகா கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் 'காதல்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Advertisment

இந்நிலையில், ஜோதிகாவின் அடுத்தபடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியில் உருவாகும் ஒரு படத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத்தழுவி இந்தியில் ஒரு படம் உருவாகவுள்ளதாகவும், அதில் ஜோதிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisment

இப்படத்தில் ஸ்ரீகாந்த் பொல்லாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க ஜோதிகா மட்டுமல்லாமல், ஆலயாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை துஷார் ஹிராநந்தினி இயக்குகிறாராம்.

ஜோதிகா, தமிழில் அதிகப் படங்கள் நடித்திருந்தாலும் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் சொற்ப படங்களிலே நடித்துள்ளார். இந்தத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியில் ஜோதிகா நடிக்கவுள்ளார். இதற்கு முன்னதாக இந்தியில் ஜோதிகா நடிப்பில்'டோலி சஜா கே ரக்கீனா' படம் மற்றும் 'லிட்டில் ஜான்' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.