Advertisment

அஜித்துடன் நடிக்கும் ஸ்ரீதேவியின் மகள்...?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. இது அமிதாப்பச்சன் நடித்த 'பிங்க்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஆகஸ்ட் 8 தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

Advertisment

jhanvi kapoor

அஜித் நடித்திருந்தும் இந்தப் படத்தின் வியாபாரம் தாமதமாவதற்குக் காரணம், பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க பெரும்பாலான விநியோகஸ்தர்கள் பயப்படுவதுதான் காரணம் என்று கூறப்பட்டது.

இந்தப்படத்தின் தமிழக திரையரங்க உரிமைக்காக தயாரிப்பு நிறுவனம் கேட்கும் விலை கிட்டதட்ட 60 கோடிக்கு மேல் என்று சொல்லப்படுகிறது. இதனால் பல விநியோகஸ்தர்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டியுள்ளார்கள்.

Advertisment

தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரி ட்விட்டரில், ‘எஸ். பிக்சர்ஸின் ஜி. ஸ்ரீனிவாசன், கந்தசாமி ஆர்ட்ஸ் செண்டரின் ராஜாமன்னார் மற்றும் ராகுல் உள்ளிட்ட மூவரும் இணைந்து கூட்டாக இந்த படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்குகிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் பட பூஜையில் தெரிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் தாதக் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். அவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி அவர் இப்படத்தில் நடித்தால் தமிழில் அறிமுகம் ஆகும் படமாக இது இருக்கும்.

jhanvi kapoor thala 60
இதையும் படியுங்கள்
Subscribe