sree

சமீபத்தில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி சென்னையில் கரைக்கப்பட்டது. இதையடுத்து அவர் மறைவுக்காக சென்னை, மும்பை, ஐதராபாத் நகரங்களில் இரங்கல் கூட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அதில் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்று ஸ்ரீதேவி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே போல் வெளிநாடுகளில் நடைபெறும் இரங்கல் கூட்டங்களில் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள ரசிகர்கள் ஒரு படி மேலே போய் அங்குள்ள உணவகம் ஒன்றில் ஸ்ரீதேவி உருவத்தில் பொம்மை செய்து அதற்கு பட்டு புடவை நகைகள் அணிவித்து வைத்து அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.