கார்கில் போரின்போது பல இந்திய ராணுவ வீரர்களை காப்பாற்றிய பெண் ராணுவ பைலட் குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

Advertisment

jhanvi kapoor

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் நடிப்பில் முதன் முதலாக வெளியான படம் தடக். கார்கில் கேர்ள் என்று அழைக்கப்படும் குஞ்ஜன் சக்சேனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படும் படம்தான் ‘குஞ்ஜன் சக்சேனா - தி கார்கில் கேர்ள்’.இப்படத்தை கரண் ஜோஹர் தயாரிக்கிறார்.

குஞ்ஜன் சக்சேனா கார்கில் போர் சமயத்தில் காயம்பட்ட எண்ணற்ற இந்திய ராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக இடம் மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர். சவுர்ய சக்ரா விருது பெற்ற முதல் பெண்ணும் இவரே. இவரது வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படம் இது.

Advertisment

alt="sixer ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f29aba6b-ffbd-4fbc-a441-395551086dd8" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x150%20sixer%20ad_13.jpg" />

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பகிர்ந்த கரண் ஜோஹர், "பெண்ணால் பைலட் ஆக முடியாது என்றார்கள். ஆனால், உறுதியாக இருந்து பறக்க வேண்டும் என்று விரும்பினார்!. 'குஞ்ஜன் சக்சேனா - தி கார்கில் கேர்ள்’, மார்ச் 13, 2020 அன்று வெளியாகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்ட ஜான்வி, சுமார் ஆறு கிலோ வரை எடையை குறைத்துள்ளாராம்.