/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sreeee.jpg)
தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் 'ஸ்ரீலீக்ஸ்' வாயிலாக வெளியிட்டது தெலுங்கு சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டு பின்னர் பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து நடிகர் பவன் கல்யாண்பேசியபோது..."'நடிகை ஸ்ரீரெட்டி தனது பிரச்சினை உண்மை என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டும். தொலைக்காட்சிகளில் இதுபோன்று போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்துவது சரியல்ல. தொலைக்காட்சிகளால் செய்திகளை வழங்க முடியுமே தவிர, நீதி வழங்க முடியாது'' என கூறியிருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ssssssssss.jpg)
இதை கேட்டு ஆத்திரம் அடைந்த நடிகை ஸ்ரீரெட்டி, உடனடியாக இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்து..."பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு வருத்தப்படுகிறேன், அவரை சகோதரராக கருதியதற்கு என்னையே நான் செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டுமென கூறியதுடன் நில்லாமல் காலிலிருந்த செருப்பைக் கழற்றி பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு செருப்பால் அடித்துக்கொள்கிறேன் என்று கன்னத்தில் செருப்பால் அடித்துக்கொண்டார், பின்னர் தன் நடு விரலை காட்டி தவறான செய்கையை காண்பித்தார்'. மேலும் இப்படி செய்தியாளர்கள் முன்னிலையில் செருப்பால் அடித்துக்கொண்டதற்கும், விரலை காண்பித்ததற்கும் பவன் கல்யாண் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஸ்ரீ ரெட்டியை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் நடிகை ஸ்ரீரெட்டி இதன் மூலம் மீண்டும் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Follow Us