Advertisment

ஸ்ரீரெட்டியின் பட்டியலில் இணைந்த மற்றொரு முன்னணி இயக்குனர்... தமிழ் சினிமாவில் மீண்டும் அதிர்ச்சி !

sri reddy

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

சினிமாவில் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அவர் சமீபத்தில் நடிகர் நானி மீதும், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் லாரன்ஸ் ஆகியோர் மீது பாலியல் புகார் அளித்து திரையுலகை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் இது தமிழ் சினிமாவிற்கான நேரம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு எச்சரித்தார். இதையடுத்து ஸ்ரீ ரெட்டி நடிகர் சங்கத் தலைவர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும், மேலும் தனது பட்டியலில் மேலும் சிலர் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

sri reddy

Advertisment

பின்னர் இதற்கு நடிகர் டி.ராஜேந்தர் "தனிமனித ஒழுக்கம் மிக முக்கியமானது. என் மீது இதுவரை ஒரு கிசுகிசுவும் வந்தது இல்லை. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு, குறிப்பிட்டவர்கள் உரிய விளக்கம் அளித்தால் பிரச்சினைகள் தீரும்" என ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு ஸ்ரீரெட்டியும் நன்றி தெரிவித்தார். இதையடுத்து பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிவரும் ஸ்ரீரெட்டிக்கு ஐதராபாத்தில் நுழைய தடை விதிக்கப்படலாம் என்று வதந்தி பரவியது. இதை தொடர்ந்து நடிகை ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் நுழைய தனக்கு தடை விதிக்க வேண்டாம் என்று தெலுங்கானா முதல்மந்திரி சந்திரசேகரராவுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். மேலும் அத்துடன் அரசியல்வாதிகள் மீதும் செக்ஸ் புகார் தெரிவித்தார்.

sri reddy

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி.தற்போது நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீதும் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார். நான் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சென்றபோது அவர் என்னை சுந்தர்.சி.யிடம் அறிமுகம் செய்து வைத்தார். ஃபேஸ்புக் நண்பர் யு.கே.செந்தில்குமாரையும் (ஒளிப்பதிவாளர்) சந்தித்தேன். அடுத்த படத்தில் நீங்களும் ஒரு ஹீரோயின் என்று எனக்கு அவர் வாக்குறுதி அளித்தார். மறுநாள் போன் செய்து நோவோடெல் ஓட்டலுக்கு வரச் சொன்னார். படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட் (பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன்பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்... கணேஷ் ஒரு பிராடு, அவர் எனக்கு உதவி செய்யவில்லை" என்று ஸ்ரீ ரெட்டி பதிவிட்டுள்ளது தமிழ் திரையுலகை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

srileaks srireddy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe