Skip to main content

ஸ்ரீரெட்டியின் பட்டியலில் இணைந்த மற்றொரு முன்னணி இயக்குனர்... தமிழ் சினிமாவில் மீண்டும் அதிர்ச்சி !

Published on 16/07/2018 | Edited on 16/07/2018
sri reddy

 

 

 

சினிமாவில் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அவர் சமீபத்தில் நடிகர் நானி மீதும், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் லாரன்ஸ் ஆகியோர் மீது பாலியல் புகார் அளித்து திரையுலகை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் இது தமிழ் சினிமாவிற்கான நேரம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு எச்சரித்தார். இதையடுத்து ஸ்ரீ ரெட்டி நடிகர் சங்கத் தலைவர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும், மேலும் தனது பட்டியலில் மேலும் சிலர் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். 

 

sri reddy

 

பின்னர் இதற்கு நடிகர் டி.ராஜேந்தர் "தனிமனித ஒழுக்கம் மிக முக்கியமானது. என் மீது இதுவரை ஒரு கிசுகிசுவும் வந்தது இல்லை. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு, குறிப்பிட்டவர்கள் உரிய விளக்கம் அளித்தால் பிரச்சினைகள் தீரும்"  என ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு ஸ்ரீரெட்டியும் நன்றி தெரிவித்தார். இதையடுத்து பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிவரும் ஸ்ரீரெட்டிக்கு ஐதராபாத்தில் நுழைய தடை விதிக்கப்படலாம் என்று வதந்தி பரவியது. இதை தொடர்ந்து நடிகை ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் நுழைய தனக்கு தடை விதிக்க வேண்டாம் என்று தெலுங்கானா முதல்மந்திரி சந்திரசேகரராவுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். மேலும் அத்துடன் அரசியல்வாதிகள் மீதும் செக்ஸ் புகார் தெரிவித்தார்.

 

sri reddy

 

 

 

இந்நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி.தற்போது நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீதும் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார். நான் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சென்றபோது அவர் என்னை சுந்தர்.சி.யிடம் அறிமுகம் செய்து வைத்தார். ஃபேஸ்புக் நண்பர் யு.கே.செந்தில்குமாரையும் (ஒளிப்பதிவாளர்) சந்தித்தேன். அடுத்த படத்தில் நீங்களும் ஒரு ஹீரோயின் என்று எனக்கு அவர் வாக்குறுதி அளித்தார். மறுநாள் போன் செய்து நோவோடெல் ஓட்டலுக்கு வரச் சொன்னார். படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட் (பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன்பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்... கணேஷ் ஒரு பிராடு, அவர் எனக்கு உதவி செய்யவில்லை" என்று ஸ்ரீ ரெட்டி பதிவிட்டுள்ளது தமிழ் திரையுலகை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராடவுள்ளேன்' - ஸ்ரீரெட்டி அறிவிப்பு ! 

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ஒரு பக்கம் பெண்கள் அமைப்பினரும் மாணவ, மாணவிகளும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டித்து வரும் நிலையில் தென்னிந்திய சினிமாவில் உள்ளவர்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கிய நடிகை ஸ்ரீரெட்டி பொள்ளாச்சி சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

sri reddy

 

இது குறித்து ஸ்ரீரெட்டி பேசும்போது.... "பொள்ளாச்சி சம்பவம் ஏழு வருடங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும். இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்து இருக்கிறேன். விரைவில் போலீஸ் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும்" என்றார்.

 

Next Story

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய அடுத்த நடிகை..! படங்கள் உள்ளே

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
sri reddy

 

சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தென்னிந்திய சினிமாவின் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும், படங்களையும் வெளியிட்டு திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் சண்டக்கோழி 2 விழாவில் தன்னை பற்றி பேசியபோது சிரித்ததற்கு அவரை சமூகவலைத்தளத்தில் கண்டித்து "கீர்த்தி சுரேஷ் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது" என்று கோபமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகை ஹேமா குறித்தும் தற்போது சமூகவலைத்தளத்தில் காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அடுக்கடுக்காக பாலியல் புகார் கூறியிருந்த ஸ்ரீரெட்டியை நடிகை ஹேமா ஏற்கனவே... "ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தியது நல்லது அல்ல. இயக்குனர் தனது பார்வைக்கேற்ப நடிகர், நடிகைகளுக்கு கதைக்கேற்ற கதாபாத்திரத்தை கொடுப்பார். யாருடைய பரிந்துரையிலும் வாய்ப்புகள் கொடுப்பது இல்லை. ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்" என்று விமர்சித்திருந்தார். 

 

 

 

 

sri reddy


இந்நிலையில் தற்போது ஹேமா மீது கோபமடைந்த ஸ்ரீரெட்டி...."ஹேமா நீங்கள், கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சையிடம் சொல்லி உங்களுடையை ஆபாச வீடியோவை நீக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு மக்கள் மத்தியில் நான் ஆடையை கழற்றியது பற்றி பேசுங்கள். உங்கள் கருப்பு பக்கத்தை பார்க்காமல் எனது போராட்டத்தை பற்றி பேசாதீர்கள். என்னைப் பற்றி தெரியாமல் நீங்கள் கருத்து சொன்னால், நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எனது அதிரடியை பார்க்க வேண்டி இருக்கும்" என்று சமூகவலைத்தளத்தில் காட்டமாக கருத்து தெரிவித்திருப்பது தெலுங்கு பட உலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.