Advertisment

பிக்பாஸ்-3 தொகுப்பாளர் குறித்து தகவல் வெளியிட்ட ஸ்ரீரெட்டி...

தெலுங்கு சினிமாவிலும், தமிழ் சினிமாவிலும் பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி.

Advertisment

sri reddy

தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது புகார் கூறினார். தற்போது இவர் மூன்று தமிழ் படங்களில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகின. அதனால் சென்னையில் வசித்து வருகிறார்.

தெலுங்கில் நடைபெற இருக்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியை அனுஷ்கா தொகுத்து வழங்குவதாக சொல்லப்பட்டது. அவர் மட்டுமல்லாமல் தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், சிரஞ்சீவி, நாகர்ஜூனா, ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோரது பெயர்களும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பட்டியலில் பேசப்பட்டன.

Advertisment

alt="devarattam" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="354aa499-a658-4757-ae7a-fe403f14ae22" height="180" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336-x-150-devarattam_20.jpg" width="403" />

அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகத நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகர் வெங்கடேஷ்தான் தொகுத்து வழங்குகிறார் என்றும் தனக்கு கிடைத்த ரகசிய தகவல் என்றும் குறிப்பிட்டு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

bigboss sri reddy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe