உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வருவதால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பலரும் இரவு, பகல் பாராது கடினமாக உழைத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸ் பரவலைதடுக்க 21 நாட்கள் ஊரங்கைஅறிவித்திருந்த பிரதமர்நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3ஆம் தேதி நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலமும்கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி மோடியின் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து சமூகவலைத்தளத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில்..
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/srireddy-26718m-962.jpg)
''மே 3ற்கு பிறகு கரோனா வானத்திற்கு செல்லுமா என்ன?? முதலில் ஏழை மக்களைக் காப்பாற்ற நினைத்துப் பாருங்கள்.. குறைந்தபட்சம் உணவுப் பொருட்கள் வாங்கவாவது பணத்தை வழங்குங்கள். ஒருவேளை மே 3ஆம் தேதிக்கு பிறகு கரோனா வைரஸ் ஒரே ஒரு நபருக்கு பரவி, அது இலட்சக்கணக்கான மக்களுக்கு மீண்டும் பரவினால் என்ன செய்வது..?'' என பதிவிட்டுள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)