தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தவர் ஸ்ரீரெட்டி. இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு தெலுங்கு சினிமாவிலுள்ள பல பிரபலங்கள் பற்றி மீடூ புகாரளித்தார். இதில் சில தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்தும் மீடூ புகாரளித்திருந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆந்திராவிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். தற்போது தமிழ் சினிமாக்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

sri reddy

Advertisment

அண்மையில் ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பதிவில், தமன்னா நடித்து வரும் வெப் தொடர் அவரது வீட்டிற்கு அருகே நடைபெறுவதாகவும் அதனால் பெரும் தொல்லையாக இருக்கிறது. நேரில் போய் அவர்களிடம் பிரச்சனை குறித்து பேச இருப்பதாக தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளது. “எனது வீடு அருகே ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியின் ‘பங்களா வீடு’ உள்ளது. இந்த வீட்டில் கடந்த சில நாட்களாக சினிமா ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பியபோது எனது வீட்டு வாசலில் வாகனம் நின்றதால் காரை வெளியே நிறுத்தி விட்டு சென்றேன். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது எனது காரின் 2 பக்க கதவுகளும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும் படப்பிடிப்பு நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் மனோஜ் என்பவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே காரை சேதப்படுத்தி விட்டு தப்பி சென்ற மர்மநபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.