Advertisment

கீர்த்தி சுரேஷிடம் வம்பிழுத்த ஸ்ரீரெட்டி! 

sri reddy

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தென்னிந்திய சினிமாவின் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும், படங்களையும் வெளியிட்டு திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி அவரது வாழ்க்கை வரலாற்று படமான 'ரெட்டி டைரி' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தை தடை செய்யும் முயற்சியில் யாரும் ஈடுபடக்கூடாது என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலுக்கு ஸ்ரீரெட்டி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற சண்டக்கோழி 2 பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை கீர்த்தி சுரேசுடன் கலந்து கொண்ட விஷாலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது இதற்கு விஷால் பதில் கூறியபோது... "ஸ்ரீரெட்டிக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை வரவேற்கிறேன். இந்த படத்தில் நடிக்கும்போது எல்லோரும் உஷாராக இருப்பார்கள். அவர் தனது பாதுகாப்புக்கு எல்லா இடத்திலும் கேமரா வைத்து இருப்பார்" என்றார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

விஷால் இப்படி பேசியதை கேட்டு அருகில் இருந்த கீர்த்தி சுரேஷ் உட்பட படக்குழுவினர் அனைவரும் சிரித்ததாக கூறப்படுகிற நிலையில் இதில் கீர்த்தி சுரேஷ் சிரித்தது மட்டும் ஸ்ரீரெட்டியை கோபப்படுத்தி உள்ளது. மேலும் கீர்த்தி சுரேசை சமூகவலைத்தளத்தில் ஸ்ரீரெட்டி கண்டித்து பதிவிட்டுள்ளார். அதில்... "கீர்த்தி சுரேஷ் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது. கவலைப்படாதீர்கள் மேடம். நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது. ஒரு நாள் போராடுபவர்கள் வலியை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் சிரித்ததை நான் மறக்க மாட்டேன். நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள்" என்று ஸ்ரீரெட்டி கண்டித்துள்ளார்.

srileaks srireddy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe