Advertisment

“நீங்கள் கொடுக்கவுள்ள வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்”- வாய்ப்பு கேட்கும் ஸ்ரீரெட்டி

தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது புகார் கூறினார். தற்போது இவர் மூன்று தமிழ் படங்களில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகின. அதனால் சென்னையில் வசித்து வருகிறார்.

Advertisment

sri reddy

ராகவா லாரன்ஸ் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்திருந்தார். இதற்கு கடந்த ஜூலை மாதம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்த ராகவா லாரன்ஸ், “ஸ்ரீரெட்டி கூறுவது முற்றிலும் பொய். அவர் தவறு நடந்ததாக கூறப்படும் நேரத்தில் நான் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் ரிபெல் படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அத்திரைப்படம் வெளியாகி சுமார் 7 வருடங்களாகின்றன. இத்தனை நாட்களாக புகார் அளிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார். என்னை ஹோட்டல் அறையில் சந்திக்க வந்த போது ராகவேந்திரா சுவாமி படம் எல்லாம் வைத்திருந்ததாக கூறியுள்ளார். நான் என்ன முட்டாளா? ஹோட்டலின் படுக்கை அறையில் சுவாமி படத்தை வைக்க? எனக்கு ஸ்ரீரெட்டியை பார்த்தால் இப்போதும் கோபம் வரவில்லை. அவரது சமீபத்திய பேட்டிகளை பார்க்கும் போது அவரது நிலையை எண்ணி வருத்தமாக இருக்கிறது. நான் பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டுகிறேன். ஸ்ரீரெட்டி அங்கே வந்து நான் சொல்லும் காட்சிகளுக்கு நடிப்புத் திறனை நிரூபிக்கட்டும். சில நடன அசைவுகளை கற்றுத் தருகிறேன். அதன்படி நடனமாடி தனது திறமையை நிரூபிக்கட்டும். அப்படி நான் கடினமான நடன அசைவுகளை செய்து காட்டச்சொல்வேன் என்ற பயமெல்லாம் அவருக்கு வேண்டாம். அவர் மிக எளிதான நடன அசைவுகளை செய்து காட்டினால் போதும். அவர் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் அது போதும். அது தான் முக்கியம். ஒருவேளை பத்திரிகையாளர்கள் முன் நடித்துக்காட்ட தயங்கினால் அவரது வழக்கறிஞர்களை அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில் நான் வைக்கும் சோதனையில் தனது நடனத் திறமையை நிரூபித்தால் எனது அடுத்த திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்க நான் தயார் . இந்த அறிவிப்பை அவர் மீதுள்ள பயத்தால் நான் அறிவிக்கவில்லை. எனக்கு பெண்கள் மீதுள்ள மரியாதையால் சொல்கிறேன். இல்லாவிட்டால் என் அம்மாவுக்கு கோயில் கட்டினேன் என்ற பெருமையை இழந்தவனாகி விடுவேன்” என்று பதிவிட்டிருந்தார்.

alt="devarattam" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="994754da-8023-464b-a8ec-5fa2a89dbcea" height="171" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336-x-150-devarattam_4.png" width="350" />

Advertisment

கடந்த வாரம் காஞ்சனா-3 வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் தற்போது காஞ்சனாவை ரீமேக் செய்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் ஸ்ரீரெட்டி காஞ்சனா 3 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, “நீங்கள் கொடுக்கவுள்ள வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் மாஸ்டர். உங்களில் எத்தனை பேர் என்னை மாஸ்டர் படத்தில் பார்க்க விரும்புகிறீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

raghava lawrence srireddy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe