/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/srilekha_reddy_hot_photos_1106140405_011.jpg)
தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டிய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சில தினங்களுக்கு முன் தெலுங்கு நடிகர் சங்கம் தனக்கு உறுப்பினர் அட்டை வழங்க மறுத்ததை கண்டித்து ஐதராபாத்தில் உள்ள திரைப்பட வர்த்தக சபை அலுவலகம் எதிரில் ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இது பட உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி மீண்டும் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை பிரபல தயரிப்பாளரின் மகன் மீது கூறி உள்ளார். அதில்....."பிரபல தயரிப்பாளரின் மகன் அடிக்கடி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அரசுக்கு சொந்தமான ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று என்னை வற்புறுத்தி உல்லாசமாக இருப்பார். ஸ்டூடியோவுக்குள் யாரும் வரமாட்டார்கள் என்பதால் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஸ்டூடியோவை சிவப்பு விளக்கு பகுதியாகவே மாற்றிவிட்டனர். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் மகன் தொடர்பான புகைப்படங்களை விரைவில் வெளியிடுவேன். வட இந்தியாவில் இருந்து வரும் நடிகைகள் படுக்கைக்கு உடனே செல்ல ஒப்புக் கொள்வதால்தான் தென் இந்திய சினிமாவில் வட இந்திய நடிகைகள் அதிகமாக உள்ளனர். என்ன காரணத்திற்காக எனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. எனக்கு தடை விதிக்க அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. ஒரு பெண்ணாக எனது கருத்தை சுதந்திரமாக கூற உரிமை இருக்கிறது. தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். யாருக்கும் நான் பயப்படமாட்டேன்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)