'கிரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா?' - முன்னணி தமிழ் இயக்குனரை அதிர வைத்த ஸ்ரீரெட்டி!   

சினிமாவில் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

srireddy murugadoss

இதையடுத்து சமீபத்தில் நடிகர் நானி மீதும் பாலியல் புகார் அளித்து திரையுலகை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்திய அவர் 'தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஒருவர்' என்று குறிப்பிட்டு தமிழ் சினிமாவில் ஒருவர் மீதும் பாலியல் புகார் கூறி தமிழ் சினிமாவிலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தனது சமூக வலைத்தளத்தில், "தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஜி. எப்படி இருக்கீங்க... கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கா? வெலிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். எனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தீர்கள். என்னை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டீர்கள். ஆனால், இன்னும் நீங்கள் எந்த வாய்ப்பும் தரவில்லை. நீங்கள் எப்போதும் நல்ல மனிதர்" என அவர் பதிவு செய்திருப்பது தமிழ் சினிமாவில் மீண்டும் அதிர்ச்சி அலையை உண்டாக்கி ரசிகர்களையும், திரைஉலகினரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

sri reddy tweet

இயக்குனர் முருகதாஸ் மட்டுமல்லாமல் நடிகர் ஸ்ரீகாந்த் மீதும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஹைதராபாதில் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நடந்த போது பார்ட்டி கொண்டாடியது நினைவிருக்கிறதா என்று அவரைக் கேட்டுள்ள ஸ்ரீரெட்டி, அதோடு அந்தரங்கமான விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். ஸ்ரீரெட்டியின் லிஸ்ட் நீண்டு இப்பொழுது தமிழ் சினிமா வரை வந்துள்ளது. அவர் சொல்வதெல்லாம் விளம்பரத்துக்காக என்று தெலுங்கு சினிமா அவரை புறக்கணித்துவிட்டதாகக் கூறுகின்றனர். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் மீது குற்றம் சாட்டியிருக்கும் அவருக்கு எப்படி பதிலளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

vijay62 armurugadoss keerthysuresh
இதையும் படியுங்கள்
Subscribe