நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு சமீபத்தில்கரோனாதொற்று ஏற்பட்டுள்ளது. இயக்குநர் சுராஜ் இயக்கும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும்இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்று வந்தது. இதில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்குகரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்துநடிகர் வடிவேலுபோரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்," கரோனாதொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின்உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் வீடு திரும்புவார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.