ஏன் கடிதம் எழுதுகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு... என்ன செய்வது? - கமல் குறித்து ஸ்ரீபிரியா ட்வீட்!

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவே முடங்கியுள்ள நிலையில், கரோனா ஊரடங்கு குறித்து பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு, கடிதம் ஒன்றை எழுதினார்.

ccsac

அந்தக் கடிதம் ஒரே நேரத்தில் வரவேற்பையும், எதிர்ப்பையும் பெற்றுவரும் நிலையில் கமல் கடிதம் எழுதியது ஏன் என்று நடிகை ஸ்ரீப்ரியா சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்..."ஏன் கடிதம் எழுதுகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு, என்ன செய்வது? நேரே சென்று மனுக்கள் கொடுக்க முடியாது, பொதுக்கூட்டங்கள் போட்டு மக்களுக்கு நிலைமையை எடுத்துக்கூற இயலாது. அப்புறம்? சமூக ஊடகம், தொலைப்பேசி, கடிதம். தகவல் போய்ச்சேர வேண்டுமே... சரிதானே?" என்று பதிவிட்டுள்ளார்.

sripriya
இதையும் படியுங்கள்
Subscribe