sri movie new release date

திரைத்துறையில் 50 படங்களில் நடித்துள்ள ஜோதிகா, தமிழில் அதிகப் படங்கள் நடித்திருந்தாலும் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் குறைந்த படங்களில் தான் நடித்துள்ளார். ஆனால் தனது 50வது படமான 'உடன் பிறப்பே' படத்தை தொடர்ந்து மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

அந்த வகையில், பாலிவுட்டில் 'ஸ்ரீ' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ஜோதிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஆலயாவும் நடித்துள்ளார்.

Advertisment

இப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது. ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படத்தின் புது ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் தெரிவித்த ஜோதிகா, ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.